Saturday, July 7, 2018

வெறும்துயர்



அன்புள்ள ஆசிரியருக்கு...

இன்று 'செந்நா வேங்கை - 37'-ல் விகர்ணனின் தயக்கத்தைத் தொடங்கியதுமே கண்ணீர் வரத் தொடங்கி விட்டது. குண்டாசியைப் பற்றி ஆரம்பித்ததும் பெருக்கு தான்.

வேதம் காக்க எழுகிறோம், நாடும் நகரமும் எங்களுக்கே, அறத்தின் மேல் முறைமைகளின் மேல் நின்ற்கிறோம், அவர்களுக்கு உரிமையில்லை, திரெளபதியை இழந்தது... என்று அத்தனை காரணங்களும் வெளியே. உள்ளே கெளரவர்கள் மட்டும் இருக்கும் இந்த ஆலயத்தில் அவர்கள் மனம் திறந்து பேசுவதில் உண்மை பளிச்சென தெரிகிறது. கசப்பான விரோதம்; காரணமேயற்ற எரிச்சல்; கடக்கவே முடியாத கோபம். அத்தனை பேருக்கும் முடிவு தெரிந்தே இருக்கிறது.

இனி ஒவ்வொரு அத்தியாயமும் துக்கம் தான்; கண்ணீர் தான். கடைசியில் இது வெறும் துயரப் பெருங்காவியம்.

நன்றிகள்,
இரா.வசந்தகுமார்.