Thursday, July 5, 2018

போருக்கெல்லாம் அன்னை




ஜெ


மிக மெல்ல தேர்திரும்புவதுபோல போர் நோக்கி அனைத்தும் சென்றுகொண்டிருக்கின்றன. வேறேதோ நிகழ்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தால் கவனிக்காதபடி போர் வஞ்சினம் உரைத்து படைகளின் தலைமைகளை நியமித்து போருக்குக் கிளம்பிவிடுகிறார்கள். துரியோதனனின் போர் வஞ்சினம் இரண்டு வகையில் இருக்கிறது. அவனுடைய சாதுரியமே அதில் தெரிகிறது. அந்தப்போர் ஷத்ரியர்களுக்குரிய போர் என அவர்களை அவன் நம்ப வைத்துவிடுகிறான். அந்தப்போருக்குப்பின்னர் ஷத்ரியர்கள் சுபிட்சமடைவார்கள் என்று நினைக்க வைக்கிறான். அது பொய் என அவனுக்கே தெரியும். ஆனால் எந்தப்போரும் இந்தப்போருக்குப்பின்னர் எல்லாம் சரியாகிவிடும் , இதுதான் கடைசிப்போர் என்ற நம்பிக்கையால்தான் ஆரம்பிக்கிறது.  ‘போருக்கெல்லாம் இந்தப்பொர் அன்னை’ என்று சதாம் உசேன் சொன்னதாகச் சொல்வார்கள். துரியோதன்ன் சொல்வதும் அவ்வாறே இருக்கிறது

மோகனரங்கன்