Friday, July 6, 2018

குண்டாசியும் கும்பகர்ணனும்


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம் .வெண்முரசு – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை இளைய யாதவர் மருகன்  சாத்யகி மற்றும் பால்ஹிக இளவரசன் பூரிசிரவஸ்ஆகியோரை கதை மாந்தர்களாக கொண்டு , குருஷேத்திர யுத்தத்திற்கு முந்தைய நிகழ்வுகளை  குறிப்பாக போர் குறித்த வஞ்சினங்களைபாண்டவர்களும் ,கௌரவர்களும் உரைப்பதை விரிவாக எடுத்துரைத்தது .தற்போது செந்நா வேங்கை – 34 இல் துரியோதனன் தம்பி குண்டாசியின்பாத்திரத்தில் மீண்டும் கௌரவர் தரப்பில் போருக்கு முன்பு நிகழும் சம்பவங்களை எடுத்துரைக்க தொடங்கியுள்ளது .குண்டாசி மஹாபாரதத்தில்ஒரு வித்தியாசமான பாத்திரம் .துரியோதனன் பாண்டவர்களை அரக்கு மாளிகையில் தங்க வைத்து ,அவர்களை படுகொலை செய்யும் திட்டத்தைதனது நூற்றுவர் தம்பியரிடம் எடுத்துரைப்பான்.அதில் உடன்படாதவன் குண்டாசி .ஆயினும் குன்றிய உடல் திறத்தாலும் ,மனவலிமையற்றதன்மையாலும் துரியோதனன் முடிவை எதிர்கொள்ளாமல் பிச்சி நிலையில் மதுவுக்கு அடிமையாகி குடி நோயாளியாக மாறி விட்டான் . கடந்தமுப்பது வருடங்களுக்கும் மேலாக குண்டாசி குடிக்கு அடிமையானது தான் பரிதாபமான ஒன்று.
வெண்முரசு – நூல் ஐந்து – ‘பிரயாகை –
90 பாண்டவ பீமன் பீமன் குண்டாசியை அடையாளம் கண்டு கொண்டு இரண்டு காலடிகளில் அவனைநெருங்கி கன்னத்தில் ஓங்கி அறைந்தான்குண்டாசி அலறியபடி சுவர்மூலை நோக்கி விழுந்தபோது அவன் கழுத்தைப்பற்றித் தூக்கி சுவரோடுசாய்த்து “குடிக்கிறாயாகுடிக்கிறாய் அல்லவாமூடா என்று கிட்டித்தபற்களுடன் கூவினான்.
சொல் குடிக்கிறாயா?”குண்டாசி திணறியபடிஇருகைகளாலும் அவன் கையை பற்றியபடி “இல்லை மூத்தவரே இல்லை மூத்தவரே!” என்றான்பீமன் பற்களை இறுக்கி “இனி ஒரு சொட்டு உன்வாயில் விழுந்ததென்றால் அன்றே உன்னைக் கொன்று கங்கையில் வீசுவேன் என்றான்.
இல்லை மூத்தவரே இனி குடிக்கமாட்டேன் என்றான்குண்டாசிபீமனின் கை தளர அவன் துவண்டு விழப்போனான்பீமன் அவனை அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொண்டு “மூடாமூடா என்றான்தன்பெரிய கைகளால் அவன் தோள்களை மாறி மாறி அடித்தபின் மார்புடன் இறுக்கிக்கொண்டான்
ஆம்.குண்டாசியின் மீது மட்டற்ற அன்பும் பாசமும் பரிவும் கொண்டவன் தான் பீமன்.ஆயினும் கௌரவ முதல்வன் துரியோதனன் நிகழ்த்தியசூதாட்ட நிகழ்வில் பீமன் கௌரவ நூற்றுவரையும் போரில் கொல்வேன் என்றது குண்டாசியையும் சேர்த்து தான்.கெட்டவர்கள் பக்கம் இருக்கும்நல்லவர்களுக்கு வரும் சோதனைகளை மற்றும் அதனை அவர்கள் எதிர்கொண்ட விதங்களை ராமாயணத்திலும் ,மகாபாரதத்திலும் விரிவாகபார்க்கலாம் .அந்தவகையில் குண்டாசியும் கும்பகர்ணனும் ஒன்றே ஒருவன் குடிக்கு அடிமை .மற்றொருவன் நீண்ட தூக்கத்துக்கு அடிமை.தனதுதனயன் செய்த தவறுகளை தட்டிக்கேட்க முடியாமலும் ,அவனை விட்டு பிரிய மனமில்லாமலும் ,தனயனுடன் களம் புகுந்து உயிர் விடுவதேஅவர்களின் விடுதலை .

இது இன்றைய கால சூழலுக்கும் பொருந்தும் .உயிர் விடும் போர்கள் கிடையாது .களம் தான் வேறு .லஞ்ச ,லாவண்யங்களில் மூழ்கி திளைக்கும்அதிகாரிகளின் கீழ் வேலை பார்க்கும் நேர்மையான அலுவலர் எதிர் நோக்குவதும் இத்தகைய சிக்கல்களைத்தான்.தனது மேலதிகாரியின்சட்டத்துக்கும் ,நீதிக்கும் புறம்பான செயல்களை கண்டிக்க முடியாமலும் ,அதற்காக அந்த வேலை சூழலை விட்டுவிடவும் முடியாமல் ,அவர்கள்நடத்தும் மௌன போராட்டம் அவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலைத்தான் தரும் .ஆனாலும் அதனை அவர்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும்குண்டாசியை போல 
நன்றி ஜெயமோகன் அவர்களே !
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்