அன்புள்ள ஜெ
அபிமன்யூ பற்றி ஒரு கடிதம் வந்திருந்தது. நானும் அதைக் கவனித்தேன்.
அதில் நுட்பமான ஒரு சின்ன விஷயத்தை வாசித்து குறித்து வைத்திருந்தேன்.
இந்த வரி மகனுக்கும் அம்மாவுக்குமான
உறவைச் சொல்லும் இடம். பல உயிரினங்கள் ஒரு வயசுக்குமேல்தான் ஆணோ பெண்ணோ ஆகும் என்று
படித்திருக்கிறேன். அதைப்போலத்தான் இது. மகனில் பெண்மை அம்சம் இருக்கும் வரை அம்மாவுக்கு
அவன் மிக நெருக்கமானவன். ஆகவேதான் நனறாக வளர்ந்தபின்னரும் அம்மாவுக்கு செல்லமாக இருக்கும்
பையன்கள் கொஞ்சம் பெண்போலவே இருக்கிறார்கள். இந்த இடம் இப்படி சரியாக நின்று வாசிக்கமுடியாமல்
ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு அத்தியாயத்தில் வருவது ஆச்சரியமான விஷயம்
ராஜி