அன்புள்ள ஜெ
அபிமன்யூ பற்றிய கடிதங்களைக் கண்டேன். ஆரம்பம் முதலே அபிமன்யூ
உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டே இருப்பவனாகவே இருக்கிறான். அவனுடைய குணச்சித்திரம்
மாறிக்கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட தற்கொலைதான் செய்துகொள்கிறான். அவனுடைய கிரைஸிஸை
பலவாறாக விளக்கலாம். ஆனால் அவனுடைய சிக்கலை வெண்முரசில் வரும் ஒரு வரி ஆழமாகச் சொல்லிவிடுகிறது.
அவனுக்குள் கிருஷ்ணார்ஜுன யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது. அதுவே அவனுடைய பிரச்சினை
அருணாச்சலம்