ஜெ
சுதசோமன் தனக்குத்தானே சாபம் கொடுக்கிறான். தன் தந்தைக்கே சாபம் கொடுக்கிறான், வெண்முரசில் தொடர்ச்சியான உச்சங்கள். அதில் மிகவும் கொந்தளிக்கச் செய்த இடம் இது. எவ்வளவோ உச்சங்கள் வந்துவிட்டன. ஆனால் இதுவே என் மனதில் இனி என்றென்றுமாக நிலைகொள்ளும்
நெறிமீறி தொடையறைந்து கொன்ற என் தந்தைக்கு நான் அளிக்க விழையும் தண்டனை ஒன்றே. எஞ்சிய வாழ்நாள் முழுக்க தந்தையென்றிருப்பது என்றால் என்னவென்று அவர் உணரவேண்டும்… ஓர் இரவுகூட அவர் விழி நனைந்து வழியாமல் துயிலக்கூடாது. அதற்குரிய வழி நாங்கள் இம்மஞ்சத்திலேயே இறப்பதுதான்… இங்கிருந்து எழுந்து நாங்கள் இயற்றுவதற்கு ஒன்றும் இல்லை. பழிசுமந்து வாழ்வதன்றி எங்களுக்காகக் காத்திருப்பதும் பிறிதில்லை… இம்மஞ்சமே சிதையென்றாகட்டும்… தெய்வங்களிடம் கோருவது அதைமட்டுமே.
இது பீமனின் இரண்டு மைந்தர்களின் குணச்சித்திரமக போரிலும் அதற்கு முன்பும் சொல்லப்பட்டுவிட்டது. ஆகவே இதை அவர்கல் சொல்லும்போது அவர்கள் வேறு ஒன்றுமே சொல்லமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது அவர்களின் கதாபாத்திரங்கள் அவ்வளவு துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஆகவேதான் அவர்களை எண்ணி எண்ணி மனம் பொருமிக்கொண்டே இருக்கிறது
ராஜ்