அன்புள்ள ஜெ
தெய்வங்களே என்ற அழைப்பைப் பற்றிய கடிதங்களைப் பார்த்தேன்.
வெண்முரசிலே தெய்வங்களே மூதாதையரே என்ற அழைப்பை அந்தணர்கள் எழுப்புவதே இல்லை என்று
தோன்றுகிறது [நான் முழுக்க பரிசோதிக்கவில்லை] ஆனால் இது ஒரு முக்கியமான அம்சம். மூதாதை
வழிபாடு அந்தணர்களுக்கு இல்லையா? அவர்கள் ஆசிரியர்களையே வழிபடுகிறார்களா? மூதாதையருக்கான
சடங்குகளைச் செய்கிறார்கள். ஆனால் அவர்களை தெய்வங்களாக எண்ணி வணங்குவதில்லை.
மகேந்திரன்