ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம், என்னை நீங்கள் அறிவீர்கள். வெண்முரசு கிழக்கில் செம்பதிப்பு வரத்தொடங்கிய காலம் முதல் ஒரு புத்தகம் தவராமல் வாங்கியுள்ளேன் உங்கள் கையொப்பத்துடன். அதில் ஒரு சிறுமகிழ்ச்சி. குறுதிச்சாரல்லுக்குப்பின் எந்த புத்தகமும் வெளியிப்படவில்லை, கிழக்கல் கேட்டத்திற்கும் "கூடிய விரைவில் வரும்" என்றே பதில் வந்தது. தாங்களாவது உரிய விளக்கத்தை தருவீர்கள் என்று நம்பி எழுதுகிறேன். அனைத்து வெண்முரசும் செம்பதிப்பாய் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. என் காலத்திற்கு அது என்றும் என்னுடன் இருக்கும்.
உங்கள் பதிலை எதிர்பார்க்கும்,
அஜித் குமார்.
அன்புள்ள அஜித்குமார்
இமைக்கணம் நாவலுக்குப்பின் போர் ஆரம்பித்துவிட்டது.
வெண்முரசின் மனநிலையே போருக்கு முன் போருக்குப் பின் என மாறிவிட்டது. இமைக்கணத்தில்
சில திருத்தங்கள் செய்யவேண்டியிருந்தது. அதைச் செய்துவிட்டு செம்பதிப்பு கொண்டுவரலாம்
என்றேன். பதிப்பகம் காத்திருந்தது, அவ்வப்போது நினைவூட்டியது. ஆனால் என்னால் திரும்பச்சென்று
அதை திருத்தவே முடியவில்லை. வாசிக்கவும் கூட முடியவில்லை. இப்போது போர் முடிந்தபின்
திருத்திவிட்டேன். செம்பதிப்பு அறிவிப்பு சிலநாட்களில் வெளிவரும். அடுத்தடுத்த நாவல்கள்
உடனடியாக வெளிவரும்
ஜெ