அன்புள்ள ஜெ
வெண்முரசின் குரூரம்
மெல்ல அதன் உச்சத்தை அடைந்துவிட்டது. குரூர அழகியல் என்று சொல்கிறோம். அதெல்லாம் இந்தவகையான
பழைய எபிக் களில் இருப்பதற்கு அருகே கூட வராது. ஏனென்றால் இதெல்லாம் அடிப்படையில் டிரைபல்.
அதன்பின்னாடிதான் கிளாஸிக். ஆகவே அதிகுரூரமான விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொருவரும்
குரூரத்தில் தங்களுக்கு தாங்களே விதித்துக்கொண்ட எல்லைகளை எல்லாம் கடந்துசெல்கிறார்கள்.
அதன் உச்சம்தான் அஸ்வத்தாமன் உபபாண்டவர்களைக் கொல்வது. அதுவரை இந்தக்கதை சென்று சேரும்
என்று நினைக்கிறேன். ஒரு பதற்றத்துடனேயே இதை வாசிக்கிறேன்
ராஜேந்திரன்/.