அன்புள்ள ஜெ
அரசநடை பற்றிய பகுதிகள் இயல்பாக திரௌபதியின் கதையின்
ஒருபகுதியாக வந்தன. அந்த நடையை பிறர் பயில்கிறார்கள். சிலர் இயல்பாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நடை வேங்கையின் நடை. ஆரம்பத்திலிருந்தே அதை வெண்முரசு சொல்லிவந்திருக்கிறது. இப்போது
மைந்தர் கொல்லப்படுவதற்கு முன்பு அது ஏன் ஞாபகப்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப்பார்த்தேன்.
திரௌபதியின் எண்ணங்களில் துருபர் வந்துகொண்டே இருக்கிறார்.
ஏன்? அவரை அவளால் நினைக்காமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் அவர் செத்ததை எண்ணி வருந்தவுமில்லை.இயல்பாக
வருகிறார். இன்றைக்கு அவள் ஒரு பெரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறாள். அதற்கு வழிகோலியவர்
துருபதர். அவருடைய வஞ்சமே திரௌபதியாகப் பிறந்தது. இன்று அவள் அந்த பெரிய இழப்பு நோக்கிச்
செல்லும்போது அரசியாக அவளை ஆக்கிய அந்த அடிப்படையான வஞ்சம் நினைவூட்டப்பட்டுக்கொண்டே
இருக்கிறது
எஸ்.குமரவேல்