அன்புள்ள ஜெ
குந்தி உருவம் சிதைந்தவர்கள் ஆபத்தானவர்கள் என்று
சொல்வதை வாசித்தேன். ஆச்சரியமான விஷயம் ஒன்று அதன்பின் வந்தது. அவளே பரலிஸிஸ் வந்து
உருவம் சிதைந்தவளாக ஆகிறாள். அவள் செல்லும் அந்த இடம்தான் அவள் வாயில் அப்படி வந்திருக்கிறது.
சரியா என தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தை வாசித்ததுமே எனக்கு அப்படித் தோன்றியது
எம் செல்வநாயகம்