அன்புள்ள ஜெமோ
குந்தி சொல்லும் இந்த வரியை நான் என் அனுபவம் ஒன்றுடன்
இணைத்துப்பார்த்துக்கொண்டேன்
நான் அப்ரண்டீஸாக வேலைசெய்தபோது என் ஃபோர்மேன் ஒன்று
சொல்வார். அதாவது சரியான வடிவமாக உள்ள் பொருட்கள் பரவாயில்லை. கொஞ்சம் வடிவம் சிதைந்த
பொருளானாலும் உடனே எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும். அத்தகைய பொருட்களுக்கு உரிய பெட்டியில்
போட்டுவிடவேண்டும். நார்மலான வடிவம் உடைய பொருட்களுடன் வைக்கக்கூடாது. வடிவம் சிதைந்த
பொருட்கள் ஆபத்தானவை. அவற்றால்தான் விபத்தே உருவாகும்.
அந்த விஷயம்தான் மனிதர்களுக்கும் பொருந்துவது என்று
குந்தி சொல்கிறாள்: ஒரு அன்னையாக தன் அனுபவத்தில் அவள் இதைக் கண்டிருக்கலாம். உண்மையிலேயே
கொஞ்சம் ஊனமுற்றவர்கள் தோற்ரம் சிதைந்தவர்கள் நம்மை புண்படுத்துவார்கள். பெரிய குற்றவாளிகளிலும்
அதேபோன்றவர்கள் அதிகம். குற்றவாளிகளின் பெயர்களிலேயே மாலைக்கண் செல்வம், மூக்கறுந்தான்
போன்று உறுப்பு அடையாளங்கள் இருப்பது இதனால்தான் என தோன்றுகிறது
ரா கணேஷ்