Tuesday, August 13, 2019

துரியனும் ராவணனும்





அன்புள்ள ஜெ,

துரியோதனனின் வீழ்ச்சியுடன் மகாபாரதத்தில் டிராஜிக் ஹீரோக்களின் கதைகள் முடிகின்றன. பீஷ்மர், கர்ணன் எல்லாருமே டிராஜிக் ஹீரோஸ்தான். அரிஸ்டாட்டிலின் கொள்கைப்படி ஒரு நாயகன் ஒரே ஒரு சின்ன பிரச்சினையால், ஊழின் விளையாட்டால் வீழ்ச்சி அடைவதுதான் டிராஜடி. மூலராமாயணத்தில் ராவணன் கெட்ட அசுரன். ஆனால் கம்பராமாயணத்தில் அவன் டிராஜிக் ஹீரோ. சீதையைக் கவர்ந்து வந்தது தவிர அவனிடம் எந்தப்பிரச்னையும் இல்லை. அப்படி ஒரு உச்சிக்கு அவனைத்தூக்கி வைக்கிறார் கம்பன்.

அதேபோல வெண்முரசின் துரியோதனனும் ஒரு உச்சக்கதாபாத்திரமாகவே இருக்கிறான். அன்பும் பெருந்தன்மையும் சமநோக்கும் கொண்டவன். நீதியுணர்ச்சிகொண்டவன். போரில் சாகும் வரைக்கும்கூட அவன் நெறிகளை மீறவில்லை. சகாதேவனிடம் போரிடுகிறேன் என்று சொல்லியிருந்தாலேபோதும். அதைச்செய்யவில்லை. அந்த நிமிர்வுதான் அவனுடைய வீழ்ச்சியை அவ்வளவு பெரிய ஒரு சோர்வை அளிக்கவைப்பதாக உள்ளது. சோர்வு என்று சொல்லமுடியாது. ஒரு வகையான நிறைவுதான் அது

எம்.பாஸ்கர்