அன்புள்ள ஜெ
இன்றைய அத்தியாயம் மிகச்சிக்கலானது. துரியோதனன் கொல்லப்பட்டான்.
பாண்டவர்கள் அங்கிருந்து கிளம்பிச்செல்கிறார்கள். அவ்வளவுதான் நிகழ்ச்சிகள் உள்ளன.
ஆனால் ஒவ்வொரு எண்ணங்களும் மிகச்சிக்கலானதாக உள்ளது. ஒரு அத்தியாயத்திற்குள் பல கிளைமாக்ஸ்
பகுதிகள் இருப்பதுபோலத் தோன்றுகிறது.
துரியோதனன் மண்ணாக மாறுவது ஒரு கவித்துவமான உச்சம்.
இனி அவனுடன் மானசீகமாக உரையாட முடியாது என்ற்ய் யுதிஷ்டிரர் உணர்வது இன்னொரு உச்சம். உண்மையில்
அதுவரை அவர்கள் மானசீகமாகத்தான் உரையாடிக்கொண்டும் போரிட்டுக்கொண்டும் இருந்திருக்கிறார்கள்,
அவர்கல் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை என்பது இன்னொரு வெளிப்பாடு.
அதேபோல அந்த
இரு கதைகளும் இரு தேவர்களாக எழுந்து இளைய யாதவருக்குச் சாபம் கொடுப்பது ஓர் உச்சம்.
பீமனை குரங்குகள் கைவிடும் நிகழ்ச்சி ஊடே வருகிறது. ஒரு அத்தியாயத்தில் இத்தனை உணர்வெழுச்சிகள்
அலைப்பாய்தல்களை வாசிப்பது நீண்ட ஒரு நாவலையே வாசித்துமுடித்த ஒரு வகையான நிறைவையும்
சோர்வையும் அளித்தது. .
என்ற வரி வழியாக இந்தஅத்தியாயத்தையே புரிந்துகொள்ள முடிந்தது. அது
ஒரு தருணம்தான். ஆனால் அத்தனை நாடகங்கள் அங்கே நடக்கின்றன. அவற்றின் வழியாகத்தான் அவர்கள்
மீண்டு வரமுடிகிறது. அத்தனை சொற்கள் தேவைப்படுகின்றன
ராகவேந்திரன்