அன்புள்ள ஜெ
இந்த அத்தியாயம் குந்தியின் உடைவைப் பற்றியது. சிதைவு
அழிவு எல்லாம் வேறு உடைவு என்பது வேறு. அந்த வரி மிகவும் பாதிக்கத்தக்கதாக இருந்தது.
நான் அந்த வரியிலேயே நின்றுவிட்டேன். தனக்குள் ஒன்று உடைந்ததைப்பற்றி திரௌபதி சொல்கிறாள்.
ஆனால் அது ஏன் சொல்லப்பட்டது என்றால் குந்தியின் கடைசி உடைவைப்பற்றிச் சொல்வதற்காகத்தான்.
ஆனால் திரௌபதி வழியாக சொல்லப்படுகிறது. திரௌபதி உடையவில்லை. ஆனால் குந்தி உடைந்துவிடுகிறாள்.
முழுமையாகவே உடைகிறாள். இனி அவளுக்கு மீட்பென்பதே கிடையாது. அவ்வளவுதான். அந்த முடிவை
உடைவு என்ற சொல்லைக்கொண்டுதான் சொல்லிவிடமுடியும்.
ஜெயராஜ்