அன்புள்ள ஜெ
திரௌபதியின் வழியாகவே கதை சொல்லப்படுகிறது. அவளுக்கும்
பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவின் ஆழமும் அவள் தன் பிள்ளைகளை எப்படிப்பார்க்கிறாள்
என்பதும். ஆகவே அவள் மகன்கள் சாகும்போது எப்படி எதிர்கொள்வாள் என்றே அந்த அத்தியாயம்
சென்றுகொண்டிருந்தது. ஆனால் கடைசியில் அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை. குந்தி உடைந்துபோகிறாள்.
குந்தி உடைவதுதான் கிளைமாக்ஸ். ஏனென்றால் குந்தியிலிருந்துதான் எல்லாம் ஆரம்பமாகிறது.
யாதவப்பெண்ணாக இருந்து அவள் குந்திபோஜனின் மகளாகச் செல்வதிலிருந்து தொடங்கிய கதை இப்படி
முடிவுக்கு வருகிறது. இந்த முடிவு இயல்பானதும் தவிர்க்கமுடியாததும். ஆனால் அதை திரௌபதி
வழியாகக் காட்டியிருப்பதனால் ஒரு சிறுகதையின் கூர்மையான திருப்பம் போல அமைந்துள்ளது
சரவணக்குமார்