அன்புள்ள ஜெ
குந்தியின் குணச்சித்திரம் அத்தனை வேறுபாடுகளுடன்
அடிப்படையில் மாறாமலேயே இருந்துகொண்டிருக்கிறது. அவள் துரியோதனனின் சாவு பற்றிய செய்தியையும்
போரின் வெற்றி பற்றிய செய்தியையும் கவனிக்கும்போது கொள்ளும் உணர்ச்சிகளைக் கவனித்தால்
சின்னப்பெண்ணாக குந்திபோஜனுக்கு தத்துமகளாகப்போனால் அரசி ஆகிவிடலாம் என்று கணித்து
அதை முடிவாக எடுத்த அந்த நாள்முதல் அவளுடைய ஆசையெல்லாம் அதிகாரம் மட்டும்தான் என்பது
தெரியவருகிறது. அவள் எஞ்சியிருக்கும் பகையைப்பற்றி மட்டுமே கவலைப்படுகிறாள். கர்ணனின்
சாவுதான் அவளைக் கொஞ்சம் கவலைபப்ட வைக்கிறது. ஆனால் அதையும் மறுநாளே கடந்துவிடுகிறாள்.
அவளுடைய அந்த கணக்குபார்ப்பதும் அவள் ஒவ்வொன்றையும் உள்ளே புகுந்து யோசிப்பதும் இயல்பாக
வந்துள்ளன. அவளைப்போன்ற அம்மாக்களை இப்போதுகூட பார்க்கலாம் என தோன்றுகிறது. பெண்களுக்கே
உரியது அந்த அதீதமான எச்சரிக்கை என்று தோன்றுகிறது.
செல்வக்குமார்