ஜெ,
தீயின் எடையில் அஸ்வத்தாமன் கொள்ளும்
கொலைவெறிக்காட்சி பயங்கரமானது. மகாபாரதப் போரின் உச்சமான கொடூரம் இது. நோயுற்ற குழந்தைகளை
வெட்டிக்கொல்கிறார். கிருபரும் கிருதவர்மனும் அதற்குத்துணை நிற்கிறார்கள். இவ்வளவுநாளும்
அவர் கட்டிக்காத்த நெறிகள் எல்லாமே அழிந்துவிட்டன. அவருடைய குரோதத்தை நெற்றிக்கன் என்றே
சொல்லிக்கொண்டிருந்ததும் அவர் வரும் வழியில் கலியையும் மூதேவியையும் அதன்பின் மகாருத்ரனையும்
பார்த்ததும் எல்லாம் இந்தக் கொலைவெறியாட்டத்துடன் இணைந்து வாசிக்கவேண்டியவை. அவருடைய
அந்த தாண்டவம் போர்த்தெய்வத்தின் கடைசி அடி என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது
பாண்டவர்கள் செய்த எல்லா பாவங்களுக்கும்
இந்தச் செயல் மூலம் ஈடுகட்டப்பட்டது. பீஷ்மர் முதல் கர்ணன் துரியோதனன் வரை அத்தனைபேரையும்
அவர்கல் கொன்றார்கள். அநீதி செய்தார்கள். இனி இந்த அநீதிக்கு அவர்கள் எவரையுமே பழிசொல்லமுடியாது.
செய்தது திரும்பி வரும் என்பதற்கான சான்று இந்தச்செயல்
பாஸ்கர்