அன்புள்ள ஜெ
எல்லா சடங்குகளும்
உண்மையிலேயே நிகழ்ந்து அதன்பின்னர் குறியீடாக ஆக்கிக்கொள்ளப்பட்டவை. அப்படியென்றால்
போரும் அப்படித்தான். உண்மையில் போர்தான் மிகப்பெரிய மனிதக்குறியீடு. வாழ்க்கையை, மனித
மனதை, நன்மை தீமைகளின் மோதலை எல்லாமே அது குறிப்பால் உணர்த்துகிறது. அதன்படிப்பார்த்தால்
போரை குறியீடாக ஆக்குவதென்பது மகாபாரத காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது என நினைக்கிறேன்.
இந்தப்போர் நேரடியானது. ஆனால் அதை கதைவழியாகக் குறியீடாக ஆக்கியிருக்கிறார்கள். நான்
வெண்முரசின் கலர் ஸ்கீமாவை கவனிக்கிறேன். செந்நாவேங்கை என்று அது சிவப்பையே சொல்லிக்கொண்டிருந்தது.
அதன்பின் கடைசியில் கருமையைச் சொல்லி முடிக்கிறது. சிவப்பு ரஜோ குணம். அங்கே ஆரம்பித்து
தமோ குணத்தில் வந்து நின்றிருக்கிறது. ஒரு மாபெரும் ஓவியம்போலிருக்கிறது வெண்முரசு
எஸ்.ராஜேஷ்