பெரு மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
மகாபாரத போரில் தமிழ் மன்னர்கள் கலந்து கொண்டதாக வெண்முரசில் இதுவரைவரவில்லை.
முதற்கனலில் காசி சுயம்வரத்தில் பீஷ்மரோடு போரிட்ட தமிழ் மன்னனை பற்றிவருகிறது.
அனால் ஆங்கில விக்கிப்பீடியாவில் பாண்டவர்களின் படையில் மூவேந்தர்களின்படையும் கலந்துகொண்டதாக கூறப்பட்டிருக்கிறது. ( https://en.wikipedia.org/wiki/Akshauhini ).
அதற்கு சாத்தியமில்லை என நீங்கள் நினைக்கிறிர்களா? இதைப்பற்றி தங்கள்கருத்தை நேரமிருப்பின் தெரியப்படுத்துவீர்களா?
(2018 ஆம் ஆண்டு 'அச்சப்பட தேவைஇல்லை' நூல் விழாவில் தங்களிடம் நேரில்உரையாடி இருக்கிறேன், மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிகொள்ளவேண்டும்).
நன்றி
தங்கள் எழுத்தை பின்தொடரும்,
கருணாகரன்.
அன்புள்ள கருணாகரன்
மகாபாரதப்போரில்
தமிழ்மன்னர்கள் கலந்துகொள்வது இயல்வதுதான். ஆனால் முக்கியமான தாக்கம் செலுத்துமளவுக்குக்
கலந்துகொள்வது அன்றைய சூழலில் இயல்வது அல்ல. வெண்முரசில் அவ்வப்போது தமிழ்
மன்னர்கள் கலந்துகொண்ட குறிப்புகள் உள்ளன. ஆனால் மூலத்திலேயே அவர்களின் பங்களிப்பு
மிகுதியாக இல்லை.
பாரதப்போரில்
தமிழ்மன்னர்களின் பங்களிப்பு மட்டுமல்ல பின்னர் சகாதேவன் தெற்கே படையெடுத்துவந்தது
எல்லாமே மிகப்பிற்காலச் சேர்க்கைகள் என்பது என் எண்ணம். வெண்முரசின் மைய ஓட்டக்
கதைக்கு தேவையில்லாமல் இருந்தமையால் இத்தகவல் விரிவாக வராமல் போயிருக்கலாம்
ஜெ