ஜெ,
வெய்யோனை தொகுத்துக்கொள்ள
கீழ்க்கண்ட புள்ளிகளை கவனிக்கவேண்டும் என நினைக்கிறேன். இப்படி எல்லா நாவல்களையும்
ஒரு மையச்சரடைக்கொண்டு தொகுத்துக்கொள்வது என் வழக்கம்.
1 பரசுராமருக்கும்
கர்ணனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை. அதைச் சொல்லியபடித்தான் நாவல் ஆரம்பிக்கிறது. பரசுராமர்
அன்னையைக் கொன்றவர். அந்தக்கசப்பு அவரிடம் இருந்துகொண்டே இருக்கிறது. ரேணுகா- பரசுராமர்
என்ற ஒரு கதை குந்தி- கர்ணன் என இருக்கிறது
2 திரௌபதிக்கும்
குந்திக்கும் கர்ணன் போட்டுக்கொள்ளும் ஒற்றுமை. ஒரு கனவில் ரேணுகாவாக திரௌபதியை கர்ணன்
நினைக்கிறான் என்பதை கவனிக்கவேண்டும்
3 பரசுராமர் ஷத்ரியர்களுக்கு
எதிரான போரை நடத்தியவர். பழங்குடிகளுக்காக போரிட்டு அவர்களின் அரசை உருவாக்கியவர்/
கர்ணன் செய்யப்போவதும் அதைத்தான். அவன் நாகர்களுக்காகப்போராடப்போகிறான்
வெண்முரசு நாவல்கள்
தொடங்கும் இடம் முக்கியமானது. எப்போதுமே நாவல்கள் அந்த மையத்தைச் சரியாக வந்தடைந்துவிடுவது
வழக்கம்
கருணாகரன்