அன்புள்ள ஜெ
வெண்முரசு நாவல்வரிசையில்
வெய்யோன் முடிவுக்கு வருகிறது. பல நுணுக்கமான விஷயங்களைக் கவனிக்கிறேன்
முக்கியமாக நான்
கவனித்த ஒன்றுண்டு. திரௌபதிக்கும் கிருஷ்ணனுக்குமான உறவு அல்லது ஒப்புமை. தொடர்ந்து
வந்துகொண்டே இருக்கிறது. நாராயணனாக அவன் வருவதற்கு முன் நாராயணியாக அவள் வந்துவிடுகிறாள்.
சங்குசக்கரம் வைத்திருக்கிறாள்
மாயமாளிகைக் காட்சியில்
அவன் சிரிப்பைக் கேட்டு திரும்பும் கர்ணன் அவளைக் காண்கிறான்
அதேபோல இங்கேகூட
ஒருவன் அவள் கீதோபதேசம் செய்யும் காட்சியை கனவாகக் கண்டுவிடுகிறான்
இதுதான் மகாபாரதத்திற்கு
உங்கள் விளக்கம் என்று நினைக்கிறேன்
சாம்பசிவம்