அன்புள்ள ஜெ
வெண்முரசின் பக்கங்களில்
வெய்யோன் ஒரு தனி உலகம் என்று அறியப்படும். நாவல்தொடர் முழுக்க வந்துகொண்டிருந்த நாகர்களின்
கதைகள் முழுமையடைந்து உச்சம்கொள்கிறது. நாகங்களின் விளையாட்டாகவே ஆரம்பம் முதல் வெண்முரசு
வாழ்க்கையைச் சொல்லிவருகிறது. ஒருபக்கம் அது காமகுரோதமோகங்களாகவும் இன்னொருபக்கம் அது
அக்காலத்தைய அழிந்த ஆழமான ஒரு பன்பாடாகவும் பொருள்கொள்கிறது. அந்த ஒரு சிக்கலான சித்திரத்தை
வெய்யோன் இன்னும் ஆழமாக ஒரு கனவுபோல ஆக்கிக்காட்டிவிடுகிறது.
கர்ணனின் நிலையை
நிணைத்துக்கொண்டே இருக்கிறேன். அவனை ஒரு negative hero என்று நினைக்கலாம். ஆனால் other
hero என்று இப்போது நினைக்கத்தோன்றுகிறது. அவனுடைய வன்மம் வஞ்சம் எல்லாமே அப்படித்தான்
அர்த்தம் கொள்கின்றன
சரவணன்