அன்புள்ள ஜெ
வெண்முரசின் வெய்யோன் ஒரு தனிவகையான நாவலாக இருந்தது. பல வகையில் அதன் சுவை மாறிமாறிச்சென்றது. அங்கதம் ஒருபக்கம். விறுவிறுப்பான நாடகத்தன்மை ஒருபக்கம், கூடவே நுணுக்கமான நாகர்குலவரலாறு இன்னொரு பக்கம். நாகர்குலவரலாற்றைத் தனியாக இன்னொரு நாவலாகத்தான் வாசிக்கவேண்டும் என்று தோன்றியது
நாகர்களின் இந்த உலகம் மிகப்பெரிய ஒரு கதை. ஒரு சமானமானவரலாறு. அதற்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். உச்சியில் மிகச்சரியாக இருகதைகளும் வந்து இணைந்துவிட்டன
முருகவேல்