எப்போதும் காலை 8 மணிக்கே வெய்யோன் படித்துவிடும் நான் இன்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். நேற்றே தெரிந்த்து விட்டது,இந்திரப்ரஸ்ததிற்கு துரியன் வந்த நாளில் இருந்தே நடக்கப்போகிறது நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்திருந்தது இன்று நடக்கும் என்று. இன்று விடுப்பில் சரணுடன் வீட்டில் இருந்தேன்,வேறு எதோ படித்துக்கொண்டேஇருந்தேன் வெய்யோனைத்தவிர.ஆனால் சரண் மதியம் உணவிற்கு முன்னர் கட்டாயமாக வெய்யோன் படித்தே ஆகவெண்டும் என்றதால் படித்தோம்.
எதோ நீர் என்று நினைத்து துரியன் தாண்டி விடுவார் அவள் சிரிப்பாள் என்று கற்பனை செய்து கொண்டு அதெற்கே பதைத்துக்கொண்டு இருந்தேன். இப்படி துரியன் நீரில் விழுவார் அவமானப்படுவார் என்று நினைக்கவே இல்லை.
பாஞ்சாலி சிரித்ததை எந்த வழியிலும் நியாயப்படுத்தவே முடியாது. எல்லோரும் சிரிப்பது வேறு. அவர்கள் இவளைப் போல சக்கரவர்த்தினிகள் அல்ல. அன்றியும் இங்கு அவள் host. விருந்தினர்களை இப்படித்தான் சக்கரவர்த்தினிகள் நடத்துவார்களா? பலராமர் கிருஷ்ணர் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
ஊழ்தான் வேறு என்ன சொல்ல? சமையல் அறைக்குள் நானாக பேசிக்கொண்டு நானாய் ”அவளை” திட்டிக்கொண்டுமிருந்தேன்
லோகமாதேவி