நேற்றைய பகுதியை வாசிக்கும் போது இரு விஷயங்கள் தோன்றியது..
நியாய சத்திரத்தில் பங்கு அந்த நியாயம் என்று ஒன்றுண்டு. புருஷ - பிரகிருதி தொடர்பை சொல்வதற்கு பயன்படுத்துவார்கள். சார்ந்திருத்தமையை பறைசாற்ற பயன்படுத்துவார்கள். பிணைப்பு கொண்ட உயிரும் உணர்வும் உள்ள பாத்திரங்களாக அற்புதமாக உருவாகிறார்கள் இக்கதையில்.
ஆதி சங்கரரின் அன்னை தந்தையர் கனவில் கடவுள் தோன்றி அற்பாயுளில் மரணிக்கும் ஞானவான் வேண்டுமா..நீளாயுள் கொண்ட சாமானியன் வேண்டுமா என கேட்பதாக ஒரு கதையுண்டு. எனன் ஒரு human crisis.
நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது பேர் நீளாயுள் கொண்ட நூறு மூடர்களுக்கு தான் சரி என்று சொல்வார்கள் என எண்ணுகிறேன்.
சுனில்கிருஷ்ணன்