அன்புள்ள ஜெ.
வெண்முரசு நாவல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். வெய்யோன் நாவல் முழுவதும் கர்ணனின் சோகம் இழையோடிக் கொண்டு இருந்தது. இதை வாசித்து விட்டு வண்ணக்கடல் நாவலில் வரும் கர்ணனுக்கு துரியோதனன் முடிசூட்டும் நிகழ்வை வாசித்தேன். துரியோதனன் கர்ணன் முன் மண்டியிட்டு அவனை மூத்தோனாக ஏற்கும் பொழுது இப்படி ஒரு நண்பன் கிடைத்தால் யார் தான் உயிர் கொடுக்க மாட்டார்கள் என்று தோன்றியது. நாவலின் இடையே வரும் நாகர்களின் வரலாறு முழுவதும் மீண்டும் வாசிக்க வேண்டும். ஒரே ஒரு குறை. சிசுபாலன், ஜராசந்தன் வதம் இதிலேயே எதிர்பார்த்தேன். அடுத்த நாவல் எப்போது தொடங்குவீர்கள். தலைப்பை மட்டுமாவது அறிவிக்க வேண்டுகிறேன்.
தண்டபாணி தியாகராஜன்