அன்புள்ள ஜெ,
வெய்யோன் முடிவது
தெரிகிறது. ஆறு கடலில் சேர்வதுபோல மெல்லத் தேங்கி கைவழிகளாகப்பிரிந்து செல்கிரது. பல
முடிச்சுகளை அவிழ்த்து புதியமுடிச்சுகளைப்போட்டு உச்சம் அமைகிறது. வெய்யோன் அணையும்
சித்திரம் மனதை உலுக்குவதாக இருந்தது. அவன் ஒளிகொண்டு நின்றிருந்த தருணங்களை நினைவுகூர்கிறேன்.
அஸ்தினபுரத்திலே அவர்கள் மகிழ்ந்திருந்ததெல்லாம் இந்த இருட்டுக்கு வந்துசேரத்தான் என்பது
எவ்வளவு துக்கமான விஷயம்
ஆனால் இந்த வஞ்சம்தான்
அவனை நாகபாசனாக ஆக்கியது. அவன் இந்த ஆட்டத்தின் ஒரு வலுவான தரப்பு. அப்படித்தான் அவன்
இருக்கமுடியும். இதெல்லாம் என்றோ நடந்த கதை என்றாலும் இன்று நடப்பதுபோல உணர்ச்சிகொள்கிரோம்.
அதுதான் ஆச்சரியமானது
ராஜசேகர்