மகதரே, இங்கு தோள்கோத்து நகைகொண்டாடி உண்டாடும் நாமனைவருமே ஒருவரை ஒருவர் கொன்று குருதியாடத்தான் உள்ளூர விழைகிறோமா? அவ்விழைவைத்தான் நம் உளமயக்கென இங்கு கண்டோமா?”
என்று சிசுபாலன் கேட்கும் கேள்வி மிக முக்கியமானது. பலசமயம் உள்ளுணர்வால் நாம் எச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருப்போம். அனாலும் ஒன்றும் செய்யமுடியாது. நேராகச் சென்று குழிக்குள் இறங்கிக்கொண்டேதான் இருப்போம்.
யாருடைய விழைவு அது என நாம் எங்ஙனம் அறிவோம்? ஷத்ரியர் எப்போதும் ஊழின் களிப்பாவைகள் என்று காவியச்சொல் உள்ளது
என்று அதற்கு ஜராசந்தன் சொல்லும் பதிலும் மிக ஆழமானது
சுவாமி