Tuesday, January 12, 2016

கர்ணனும் பூரிசிரவஸும்



அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களில் வெய்யோன் தனிச்சிறப்பான இடம் பிடிக்குமென நினைக்கிறேன். கர்ணனின் இக்கட்டுகள் அபாரமானவை. கூடவே அவன் அடையும் மனஎழுச்சி. பல இடங்களில் கண்கலங்கினேன்

கர்ணனின் வாழ்க்கையைக் கூர்ந்து பார்க்கும்போது அவன் விதியால் மட்டும் அல்ல அவனுடைய பெருமையாலும்தான் சிறைப்பட்டிருக்கிறான் என்னும் எண்ணம் வந்துகொண்டே இருக்கிறது. இதை எவரும் ஒன்றும் செய்யமுடியாது. அவர் மிகப்பெரியவன் உடலாலும் உள்ளத்தாலும். அவனைச்சூழ்ந்திருக்கும் மனிதர்கள் மிகமிகச்சிறியவர்கள்

கர்ணனை மிக அணுக்கமாக அறியமுடிகிறது. ஆனால் அவனை நெருங்கி நம்மவனாக பார்க்கவும் முடியவில்லை. அவன் நம்மைவிடவெல்லம மிகப்பெரியவன் என்பதுதான் காரணம்

ஏதோ ஒருவகையில் அவன் புரிசிரவஸ் போல ருக்கிறான் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. அவனைப்போலவே இவனும் மனசுக்குள் மிக மென்மையானவன் அல்லவா?

ஜெயச்சந்திரன் ஆர்