Saturday, January 9, 2016

சொற்கள்



மதிப்பிற்குரிய ஜெ,

நான் வெண்முரசின் வாசகன் என்பதில் மகிழ்ச்சியும் செருக்கும் கொண்டுள்ளவன். அவற்றிலும் வெண்முரசு கையாளும் சொற்களில் எனக்கு தனிப்பட்ட காதலும் உள்ளது. நண்பர்களிடம் வெண்முரசில் கையாளப்படும் சொற்களைச் சொல்லிச் சொல்லி பெருமையில் உழல்வேன். முழுநிலவு, கருநிலவு, பிழையீடு, மணத்தன்னேற்பு இன்னும் எண்ணற்றவை. ஆனால் சில பகுதிகளில் சமீபமாக அமாவாசை (காண்டீபம்), சுயம்வரம் (வெய்யோன் 18) போன்ற சொற்களும் பயன்படுத்த படுகின்றன என்பது சற்று ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது. எழுதிக்கொண்டிருக்கும் ஆசிரியரிடம் இதைச் சொல்வது சரியா என்றும் தெரியவில்லை. தவறு என்றால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்
அரசன்

அன்புள்ள அரசன்

இது எப்படி வருகிறதென்று தெரியவில்லை. பிழைதான். திருத்தும்படிச் சொல்கிறேன்.

நல்ல சொல்வருவது எப்படி தற்செயலோ அதைப்போலத்தான். தனியாக ஒன்றும் செய்வதில்லை

ஜெ