Saturday, January 2, 2016

அறத்தினால் வீழ்ந்துவிட்டாய்



ஜெ

வெய்யோன் கர்ணனின் கதாபாத்திரம் வளர வளர ஆவேசமாக அகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக இரண்டு மனைவியரின் அரண்மனைக்கு வெளியேயும் அவன் காத்திருக்கும் இடம் பரிதாபம். ஆற்றல் இருந்தும் கருணையால் அவன் அப்படி இழிவுக்கு ஆளாகிறான். அதை விதுரர் சுட்டிக்காட்டுகிறார். ஆனாலும் அவனால் அப்படித்தான் இருக்கமுடிகிறது.

வருத்தமான பகுதிகள். அவனுக்கு ஏதாவது நல்லது நடக்காதா என்று மனம் ஏங்குகிறது. ஆனால் கதையெல்லாம் முன்னாடியே தெரியும் என்பதனால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. கர்ணன் ‘அறத்தினால் வீழ்ந்துவிட்டாய்’ என்று பாரதி பாடிய வரிகளுக்கு வாழும் உதாரணமாகா இருக்கிறான்

பிறிதின்நோய் தன் நோய்போல் தோன்றாக்கடை என்று வள்ளுவன் சொன்னதை கர்ணனின் குணமாகச் சொல்கிறீர்கள். அது கர்ணனின் இயல்பு. அதுவே அவனுடைய வீழ்ச்சி .அவனுடைய மாண்பும் அதுதான்

ஜெயராமன்