ஜெ
வெண்முரசின் மிக நுட்பமான பகுதிகளில் ஒன்று சுப்ரியை தான் கருவுற்றதை அவள் மானசீகமான காதலனாகிய ஜயத்ரதனுக்குச் சொல்லி அனுப்புவது. அவள் கருவுறவே இல்லை. ஆனால் அந்த பாவனை வந்ததுமே அவள் மனசில் காதலனின் நினைப்புத்தான் வருகிறது. மிகமுக்கியமான ஒரு மனநிலை இது. பெண்களுக்கு இந்த இயல்பு உண்டு. இதைப்புரிந்துகொள்வது கடினம்
ஏன் அவள் ஜயத்ரதனை நினைக்கிறாள்? தான் அவனை நினைத்துக்கொணிருப்பதை அவனுக்குத்தெரியவைக்கிறாள்? அவளுக்கு அவன் தன்னை நினைக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதைவிட அவளுக்கு அவன் அப்போது தேவைப்படுகிறான். ஏனென்றால் அவள் மனதிலுள்ள ஆண்மகன் அவன் தான்
சாமிநாதன்