Monday, January 4, 2016

காவியமும் வாழ்க்கையும்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

நினைப்பதுபோல் கர்ணன் எளியவன் அல்ல. நினைப்பதுபோல் என்று ஏன் சொல்லவேண்டும்? நினைப்பதற்கு அப்பாலும், நினைப்பதற்கு இப்பாலும், இதுவரை மண்ணில் பிறந்த எவரையும்விட, இனி மண்ணில் பிறக்கும் எவரையும்விட கர்ணன் பெரியவன்.

உயிரையும் வாழ்வையும் ஒரே நேரத்தில் இழக்க நதியில் நதியின்வழி இழுக்கப்பட்டன். நதியில் இருந்து தப்பித்து வாழ்வில் அவன் தொடும் உயரமெல்லாம் விதியின் வழிப்பெறப்பட்டதுபோல் இருந்தாலும் விதியை வென்றே அனைத்தையும் பெறுகின்றான். அதனை அவன் விழைவு என்றும் சொல்லலாம். ஆணவம் என்றும் சொல்லலாம். ரஜோகுணம் என்றம் சொல்லலாம். எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் மரத்தை மண்ணில் புதைத்து வைத்திருக்கும் வேர்போல அவனை இயலாமைகள் புதைத்து வைத்திருக்கிறது.

இயலாமைகள் என்று அதைச்சொல்லமுடியுமா? மரத்தின் வேர் மண்ணில் புதைந்து இருப்பது இயலாமையா? அது கடமை அதுதான் அதன் வாழ்வு. இப்படி இயாலமைபோல் கர்ணன் இருப்பதும் வாழ்வு. கடமை. தன்னை தானே சிறைவைத்துக்கொள்பவை மற்றவற்றை சுதந்திரமாக செயல்பட விடுகின்றன அல்லது மற்றவற்றின் வாழ்வுக்கு வழிசெய்கின்றன. 

கர்ணன் எவ்வளவு முயன்று  வென்று மேல் ஏறுகிறானோ அவ்வளவு கீழேவும்  மண்ணுக்குள் பிடிப்புக்காக இறங்கிப்போகின்றான் அது அவனின் ஆணிவேராக மாறுகிறது. இது ஒரு மரம்போன்ற வாழ்க்கை. கர்ணனுக்கு அருளப்பட்டவைகள் அவனை மேலேயும், சபிக்கப்பட்டவைகள் அவனை கழேயும் இழுக்கின்றன. இந்த இடத்தில்தான் கர்ணன் யாரோ ஒருவன் அல்ல நான் நீ அவன் நினைக்க வைக்கிறான். நான் யாரோ அல்ல உங்களில் ஒருவன் நீங்களாகவே இருப்பவன்  என்று எண்ண வைக்கிறான். அந்த எண்ணங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள் ஜெ.

வெய்யோன் என்ற நூலின் மூலம் கர்ணனை மிக நெருக்க மாக அறிகின்றேன் என்பதை விட ஒவ்வொரு மனிதனும் மிக நெருக்கமாக அறிகின்றான் என்பதுதான் தெளிவான ரகசியம். கர்ணனின் அனைத்து சிக்குகளும் சிடுக்குகளும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்துக்கொண்டு இருக்கிறது. அவனைப்போல மாபெரும் மனம் கொண்ட மனிதனாய் வாழவேண்டும் என்ற ஆசையும் உந்துதளும் ஏற்படும் அந்த கணத்திலேயே அவன் போல் வலிதாங்கும் இதயம் இருக்கா என்ற ஏங்கவும் வைக்கிறான்.

//சித்திரை முழுநிலவு நாளில் சம்பாபுரியின் அனைத்து குலங்களும் அமர்ந்த பேரவை கூடியபோது அது துப்பு நிலத்தில் பறவைக்கூட்டம் போலிருந்தது//-வெய்யோன்-10

///அவைக்கூடத்திற்குள் கர்ணன் ுழைந்தபோது அவை கடல் அலை எழுவதுபோல எழுந்ததுஎப்போது எழுவது ன்று அவையினருக்கு தெரியாதாகையால் முன்வரிசை எழக்கண்டு பின்வரிசையினர் எழுந்தனர்முன்வரிசை மரக்கண்டு பின்வரிசை அமர்ந்தபோது சென்ற அலை திரும்பிவந்ததுஸ்தினபுரியின் அவை தடாகத்தில் ீர் எழுவதுபோல எழும்சீராகஅமைதியாகவாழ்த்தொலிகள் கலைந்த றவைக்கூட்டம் போல ஒலித்தன//-வெய்யோன்-11 போன்ற வரிகள் வரும்போது வெய்யோன் பெரும்காவியத்தின் கற்பனை ஊற்றால் நிறைந்தது என்ற எண்ணவைக்கிறது.

அதே நேரம் கீழ்கண்ட
//நீள்மூச்சுடன் “அவர் அனைத்தையும் பொத்திப்பாதுகாக்க எண்ணும் முதுமகன்” என்றான்.//

//அவளுடைய குரலும் அவையில் அவள் நின்ற முறையும் அவள் சூதச் செவிலி அல்ல என்று காட்டுவதாக இருந்தன.//

//ஒருவேளை குதிரைச்சூதர் மட்டும் சோர்வடையக்கூடும்அதுவும் யத்திற்குரியதேதங்களுள் ஒருவன் அரசனாக ஆனதை ஏற்கமுடியாத ஆழம் அவர்களிடமிருக்கலாம்.//-வெய்யோன்-11


மூத்தவள் மணிமுடி மறுக்கப்பட்டதால் அநீதி இழைக்கப்பட்டவள். ஒவ்வொரு அவையிலும் அவளே மூத்தவள் என்றும் ஆனால் சூதர்மகள் என்பதால் மணிமுடி கிடைக்கப்பெறாதவள் என்பதும் சொல்லப்படாத பெருஞ்சொல்லாக நின்றுகொண்டிருப்பதை அவள் உணர்கிறாள். அத்துயரை நானன்றி வேறு யார் அருகணைந்து அறியமுடியும்?”-வெய்யோன்-12

வெய்யோன் மேற்கண்ட உண்மையை விளக்கி மானிட அகத்தை கண்முன் நிறுத்தும் சொற்களின் வழியாக காவியம் என்பதை மறந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணம் வாழ்க்கையாகி கண்முன் நிற்கிறது

இவ்வளவு பெரியக்காவியத்தை இன்னும் அதனை விவரிப்பாதாக நினைத்து இத்தனை சின்னதாக சுருக்கியது நான் அதற்கு செய்யும் சங்கடமே அன்றி சுகமல்ல,  என்ன செய்ய? பதம்பார்க்கிறேன் என்று ஒரு சில சோற்றை எடுத்து அழித்தி நசுக்குவதுபோல்தான் இது. ஒருபானைச்சோற்றில் ஒரு சில சோறுமட்டும் தனி என்று நினைப்பதும்,பிரிப்பதும் ஒரு வஞ்சகம் அல்லவா?.

காவியமும் வாழ்க்கையும் இரண்டும்போல் இருக்கும் ஒன்று. அதனால்தான் கர்ணன் வாழ்க்கையும் இரண்டுபோல் இருக்கும் ஒன்றாக இருக்கிறது

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்