Saturday, July 9, 2016

சில தகவல்கள்

 
 
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். சில விஷயங்கள்.

1) தருமனை பற்றியும் அவன் சூதாடியதை பற்றியும் இந்த கட்டுரையில் உள்ளது. இதை மறுபிரசுரம் செய்யவும்.
http://www.jeyamohan.in/12867


2) துரோணர் பரசுராமரை சந்திக்க போகும் போது அவரது ஒவ்வொரு உடையும் முள்ளில் கிழிந்து வெற்றுடலாக அவரை சந்திப்பார் [http://www.jeyamohan.in/57030, வண்ணக்கடல் - 29].  
"பத்து சட்டைகள்" கட்டுரையில் வரும் குறிப்பு நினைவுக்கு வருகிறது [http://www.jeyamohan.in/5896].


3) வெய்யோன் – 59
பாண்டவர்களின் கொடிகள் 
தர்மன் - நந்த உபநந்த முத்திரை
நகுல, சகதேவர் - சரபக்கொடி

விக்கிபீடியா பார்த்த போது தர்மனின் கொடி: தங்க நிலவு, கோள்கள் மற்றும் நந்த உபநந்த முரசுகள் 
நகுலனின் கொடி - மான் 
சகதேவனின் கொடி - அன்னப்பறவை.
என்று உள்ளது.

தாங்கள் எந்த நூலில் இருந்து இதை எடுத்து கொண்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா.


4) பன்னிரு படைக்களம் – 3
"ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி" ஆகிய வார்த்தைகளுக்கு நல்ல தமிழ் சொற்களை கொடுத்துள்ளீர்கள். [விழிப்புள்ளம், கனவுள்ளம், நுண்ணுள்ளம்]


5) பால்ஹிகரும் ஜரையும்
ஜரையன்னை முதுமையிலேயே பலகாலம் இருக்கிறாள். குழந்தைக்காக இளமை மீண்டு வருகிறாள். பால்ஹிகர் பலகாலம் முதுமையாக இருக்கிறார். காட்டிற்கு சென்றவுடன் அவரும் இளமை மீண்டு வருகிறார்.

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.