Tuesday, July 5, 2016

இரு கீதைகள்



 

 

ஜெ, 

 

துகிலுரியும்போது பீஷ்மரின் நிலைபாடு என்ன என்பது மூலத்திலே இல்லை. அவர் மௌனமாக இருந்தார் என்று மட்டும்தான் சொல்லப்படுகிறது. அவர் திருதராஷ்டிரனுக்குக் கட்டுப்பட்டிருந்தார் என்று சொல்லலாம். ஆனால் வெண்முரசு அவர் சொல்வதாகச் சொல்வது மிக முக்கியமான தரப்பு. அவர் குலநெறியை அரசநெறியைச் சொல்கிறார். பழைய நீதியைச் சொல்கிறார். அதன்படித்தான் அவர் அமைதியாக இருந்தார். அந்த பழைய நெறி அழியவேண்டும் என்றுதான் பாஞ்சாலி கண்ணனை அழைக்கிறாள். அதை ஏற்றே கண்ணன் அந்தப்பெண்களின் மனதிலே தோன்றுகிறான். ஆனால் இது மூலத்திலே உள்ளதும்தான். கடைசியிலே பீஷ்மர் சொல்லும் ராஜநீதியில் இதெல்லாம் உள்ளது. அதை இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள். பீஷ்ம நீதிக்கும் கிருஷ்ண நீதிக்கும் இடையே உள்ள போராட்டமே மகாபாரதம் என்று சொல்லலாம் இல்லையா?  

 

எஸ்