Tuesday, July 5, 2016

இருவகை அரசர்கள்






ஜெ,

ஜராசந்தனின் ஆளுமையை நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. அவனை ஒரு பழங்குடித்தலைமை கொண்ட அரசன் என்று சொல்லலாம். பழங்குடித்தலைவர்களுக்குரிய  மூர்க்கமும் கருணையும் கலந்தவன். ஆகவே அவனை இரட்டைநிலைகொண்டவனாகச் சொல்கிறீர்கள். அவன் ஆட்சிசெய்யும் மக்கள் அவனை தந்தை என்றே வழிபடுகிறார்கள். அவனுடைய மனதை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது நாவல். அவன் பழங்குடிவேதத்தின் புரவலன். அதிலே உள்ள மிருகத்தனம் என்பது கிரியேட்டிவ் ஆனது. ஆனால் வேறொரு காலகட்டத்தைச் சேர்ந்தது. அழிக்கவும் ஆக்கவும் வல்லமைகொண்ட தந்தையாக அரசனை உருவகிப்பதற்குப்பதிலாக அறத்தில் நிற்கும் அரசனை அமைப்பதற்கான புதியவேதத்தை கிருஷ்ணன் அவனிடம் பேசி நிறுவுகிறான் என்று தோன்றுகிறது. மிக விரிவான ஒரு பிளாட்பார்ம் அமைத்து கதையை விரித்துக்கொண்டு செல்கிறீர்கள் என்று புரிகிறது

சரவணன்