பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
ஒரு சிறிய சந்தேகம்- ராஜசூய வேள்வியில் "தேனும் இன்கனிச்சாறும் பாலும் கலந்த 'மதுபர்க்கம்' அவியாக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.அது 'மதுபர்க்கமா' அல்லது மதுவர்க்கமா. எங்கள் கல்யாணங்களில் மது வர்க்கம் என்றொரு சடங்கும் உண்டு.
மதுவர்க்கமென்பது இளநீரை உலையாக வைத்து அதில் நல்ல ஆவின் பாலையும் முப்பழச் சாற்றையும் பிழிந்துவிட்டு கருப்பஞ் சாற்றையுங்கூட்டி பதத்தில் இறக்கி வடித்தெடுத்த கொம்புத் தேனையும் விட்டுக் குழைத்துச் செய்தது என்ற செய்தி கூகுள் தேடலில் கிடைத்தது அதுதான் இதில் நீங்கள்
குறிப்பிட்டுள்ளதா?

அன்புடன்,
அ .சேஷகிரி.அன்புள்ள சேஷகிரி
அதேதான், மதுபர்க்கம் என்பது இனிய நிகழ்வுகளுக்கான சடங்கு. விருந்தினர் வரும்போதும் விடைகொள்ளும்போதும் நிகழ்வது
இப்போது அது திருமணச்சடங்காக ஆகிவிட்டது.
ஜெ