அன்புள்ள ஜெ
திரௌபதியின் குணாதிசயம் மகாபாரதத்தில் பொருத்தமில்லாமல் மாறிக்கொண்டே செல்கிறது. அது பல்வேறு நூல்களில் இருந்து எடுத்துச்சேர்த்த கதைகளால் ஆனது எனபதனால்தான் அப்படி இருக்கிறது.துகில் உரியப்படும்போது சிம்மம்போல கர்ஜிப்பவள் காட்டுக்குச் சென்றபின்னர் எனக்கு யாருமே இல்லை என்று சொல்லி கிருஷ்ணனிடம் அழுது மன்றாடுகிறாள் அதன்பிறகு விராடபுரியில் துகிலுரியப்படும்போதும் அழுது சாபம் போடுகிறாள். ஆனால் சாபம் போட்டே ஆட்களை எரிக்கவும் அவளால் முடிகிறது. இன்னொரு இடத்தில் நடக்கமுடியவில்லை என்று அழுகிறாள். நீங்கள் வெண்முரசில் அவளுக்கு கன்ஸிஸ்டெண்ட் ஆன ஒரு கேரக்டரைக் கொடுக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அவ்வப்போது அதற்கு நிறைய சமாளிப்புகள் தேவையாகின்றன என நினைக்கிறேன். அவள் நெருப்புக்கன்னியாகவே வெண்முரசு முழுக்க வருகிறாள். ஆனால் இந்நாவலிலே அப்படி இல்லை. அவளால் கீசகனை சமாளிப்பது பெரிய விஷயமா என்ன?
செல்வா