ஒரு வெற்றியிலோ அல்லது ஒரு வீழ்ச்சியிலோ இன்று உத்தரனைபோலவே முற்றிலும் மாறிவிடும் ஆளுமைகளை கண்டிருக்கிறேன்.
சிறுபிள்ளைத்தனமெல்லாம் மறந்து வீரனாக மட்டுமல்ல முறைமைகளை சகிக்கவும் வாழ்த்துக்களையும் களியாட்டுக்களையும் அவை நிகழும் போதே கடக்கவும் வலியை மயக்கமருந்து இன்றி சகிக்கவும்,குருதி கசிகையில் முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் சிலநாட்களிலேயே பயின்றும் முதிர்ந்தும் விட்டான்
“எல்லா இறப்பும் இறப்பு மட்டுமே. அப்பாலுள்ள அனைத்தும் சூதர்பாடல்களின் அளவுக்கே பொருள்கொண்டவை” என்பதை யுதிர்ஷ்டரோ விதுரரோ அன்றி உத்தரன் எனும் இளைஞன் சொல்கையில் அவ்வரிகளுக்கு இன்னும் எடை கூடுகிறது
//கலைந்து சிதறிய பசுக்களை வேட்டைநாய்கள் என முரசொலி அவ்வோசையை ஒன்றுசேர்த்து அமைதியடையச் செய்தது// ஆஹா என்ன அழகான உவமை இதில்? இதற்கு மேல் கற்பனையென்ற ஒன்றே இருக்க வாய்ப்பில்லை
லோகமாதேவி