அன்புள்ள ஜெ
வெண்முரசில் ஏராளமான
மாற்றமடையும் சித்திரிப்புக்கள் வந்துள்ளன. அவற்றில் முதுமையை அடைவதுதான் எனக்கு மிக
அற்புதமானதாக அமைந்துள்ளது என நினைக்கிறேன். புரு முதுமையை அடைவது மிக நுட்பமாகப் படிப்படியாகச்
சொல்லப்பட்டது. அவன் ஒரு சின்ன இடத்திற்குள் அடைந்துகொள்வதிலுள்ள நுட்பத்தை நினைத்துக்கொண்டே
இருந்தேன். முதுமைவரும்போது இடம் குறுகிவிடுகிரது
ஆனால் தமயந்தி
ஒரேநாளில் கிழவியாகிறாள். உடல் கிழவியானபோது சூழ்ந்திருப்பவர்கள் அவளை கிழவியாக நோக்குகிறார்கள்.
அந்த பார்வையால் அவள் கொஞ்சம் கொஞ்சமாக கிழவி ஆகிறாள். எதையும் கவனிக்காமலாகிவிடுகிறாள்.
இந்த மாற்றத்தின் கிராப் கொஞ்சம் வேகமானது. மாயம்தான். ஆனால் வாழ்க்கையில் இந்த மாயம்
நடந்துகொண்டேதான் இருக்கிறது
ஜெயராமன்