அன்புள்ள எழுத்தாளருக்கு...
மாமலரின்
இறுதி அத்தியாயத்தை இன்று மீண்டும் ஒருமுறை படிக்கும் போது, ஒன்று
தோன்றியது. (இந்திரநீலமும் மாமலரும் மட்டுமே மீண்டும் மீண்டும் படிக்க
இனிமை. மற்றவற்றைப் படிக்கையில் ஏனோ ஒரு துயரம் - அத்தனையும் அத்தனை பேரும்
ரத்தக்கடலில் அல்லவா சென்று விழப் போகிறார்கள் - என்ற எண்ணம் அவ்வப்போது
தோன்றி திடுக்கிட வைக்கும்.)
மூத்தோர் மூவருக்கும் தனித்தனி பயணங்கள் அமைந்தன அல்லது அமைத்துக் கொண்டனர்.
சகதேவன்
சென்ற அகப்பயணம் ‘நீர்க்கோலத்தில்’ சொல்லப்படாவிடினும், அரிஷ்டநேமியின்
மாற்றுரு அவன் என்பதால், நேமியின் பயணத்தை ‘காண்டீபத்தில்’ ஓரளவு அறிந்து
கொண்டதால், இங்கே ஒப்பிட்டுக் கொள்ள முடிந்தது.
நகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை? அல்லது அறியாமல் எங்காவது தவற விட்டு விட்டேனா?
நன்றிகள்,
இரா.வசந்தகுமார்.
அன்புள்ள வசந்தகுமார்
உண்மையில் இதை
இப்போது சொல்லமுடியாது. ஒருவேளை நகுலனுக்கும் சகதேவனுக்கும் வேறு நாவல்கள் இருக்கலாம்.
அவர்கள் வேறுவகையில் கண்டடையலாம்
ஜெ