Wednesday, August 9, 2017

தேசத்தற்கொலை


ஜெ,

நலம்தானே? இன்று நிஷதநாட்டில் நடக்கும் மக்கள் கொந்தளிப்பைப் பார்த்து ஒருவகையான திகைப்பை அடைந்தேன். இதைத்தான் கலி என்று சொல்கிறார்கள். மொத்த நாட்டையுமே கலிபிடித்துவிட்டது. இதெல்லாம் நடக்குமா என்று கேட்டால் நடக்கும் என்றுதான் சொல்வேன். பகைமையும் கசப்பும் பெருகிவரும். எங்குபார்த்தாலும் வன்முறையாக இருக்கும். நான் இலங்கையை 1980களில் இருந்தே பார்த்தவன். அங்கே வியாபாரம் செய்தேன். அன்றே அங்கே ஒரு பெரிய கலிவிளையாட்டு தொடங்குவதைக் கண்டேன். மக்கள் மகிழ்ச்சியாக ஆடிப்பாடிக்கொண்டு தற்கொலை நோக்கிச் சென்ருகொண்டிருந்தார்கள். பின்னாடி பிரமிள் ஸ்ரீலங்காவின் தேசியத்தற்கொலை எனறு எழுதினார். அது தேசத்தற்கொலை என்றுதான் இருக்கவெண்டும் என நினைக்கிறேன்

கணேசன் ஆறுமுகம்