அன்புள்ள ஜெ சார்,
நீர்க்கோலம் - 72
அறக்கூற்று பகுதியில் திரௌபதி சுதேஷ்ணையிடம் கூறும் சொற்கள், எனக்கு
விஷ்ணுபுரத்தில் பிங்கலனின் இந்த சொற்களை நினைவுபடுத்தியது:
"எனக்கு
எவர் மீதும் இரக்கம் இல்லை. என் மீது கூட. மனிதனுக்கு என்ன வேண்டும்? தனது
நல்லியல்பு மீது நம்பிக்கை இழக்காமலேயே சகல போகங்களையும் அனுபவிக்க
வேண்டும். பிறருடைய வியர்வையையும் கண்ணீரையும் தன் சுய நலத்திற்குப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பூமிமீது அத்தனை தத்துவங்களையும் தர்ம
விசாரங்களும் குவிந்து கிடப்பது இதற்காகத்தான். சோமர் எங்கே முடித்தார்
தெரியுமா? நான் பாவி, எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. நான் பாவி, அதுதான் மனம்
போடும் மிக ஆபாசமான வேஷம். பூமி மீது ஒவ்வோர் உயிருக்கும் உண்மையாக
வாழ்வது என்ற மகத்தான கடமை உள்ளது. அதிலிருந்து தப்பவே இங்கு வேடத்தைப்
போட்டுப் பசப்புகிறான் மனிதன். அவனுக்கு இலக்கு தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் நிச்சயம் துவங்க வேண்டிய இடம் தெரிந்திருக்கும். ஒவ்வொரு கணமும்
அந்தப் பிரக்ஞை அவனைப் பின் தொடர்ந்தபடி தான் இருக்கும்"
அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.