ஜெ
விராடரின் மனநிலையும்
அவருடைய பாவனைகளும் நுட்பமானவை. ஒரு சராசரிக்குடும்பத்தின் அப்பா அம்மாக்கள் உதவாக்கரைப்பிள்ளைகளை
எப்படி நடத்துவார்களோ அப்படியே இருக்கிறார்கள். அம்மா பையனை உண்மையில் உதவாக்கரை என
நினைக்கிறாள். ஆனால் பொத்த்திப்பொத்தி வைத்து அவன் பெரிய ஆள் என சொல்லிக்கொண்டிருக்கிராள்.
அதேபோல அப்பா சாபம்போட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் தேறிவந்துவிடுவான் என நினைக்கிறர்.
அவன் தேறிவிட்டான் என்றதும் அப்பா அப்படியே உடைந்து விடுகிறார். அவர் மகனை கொண்டாட
ஆரம்பிக்கிறார். அவர்கள் இருவரும் சண்டைபோட்டுக்கொண்டே இருப்பவர்கள். சீப்பாகச் சண்டை
போடுகிறர்கள். முதல் காட்சிமுதலே. உத்தரன் ஜெயித்துவிட்டான் என்ரதுமே கட்டிப்பிடிக்கிறார்கள்.
அழுகிறார்கல். எல்லா அப்பாக்களும் தன் மகனை சமூகம்தான் சிறுமைப்படுத்தியது தான் கஷ்டப்பட்டு
மேலே கொண்டுவந்தேன் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்
குமாரசாமி பெருமாள்