Tuesday, August 22, 2017

வ்யாசனைக் காண வேண்டும்



வெண்முரசின் நீர்க்கோலம் படித்து வருகிறேன். நளோபாக்யானம் தங்களின் நடையிலும், கற்பனையிலும் படிக்க நன்றாக இருந்தது. ஆனால் பாண்டவர் சரித்திரத்தில் நீங்கள் திரைக்கதையை வியாச பாரதத்தில் வருவது போல அமைப்பது இல்லை. கீசக வதமே சொல்லப்படவில்லை. பீமன் திரௌபதியைப் போல வேடமிட்டு கீசகனை வாதம் செய்ததும் ஒரு ஹீரோயிச மொமெண்ட். விராட பர்வத்தில் அர்ஜுனன் 6 மஹாரதர்களை வென்று அவர்களின் மேலாடையை எடுத்து வருவது சொல்லப்பட்டிருக்கும். தன்னந்தனியனாக அவன் பீஷ்மர், துரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன், அஸ்வத்தாமனை வென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு. அவன் ஒரு கதாநாயகனாக விளங்கிய மாஸ் மொமெண்ட் அது. அலி வேடம் களைந்து தன்னை வெளிப்படுத்திய அசகாய சூரத்தனம் நிறைந்த காட்சி. அவனது நாண் இடியோசை போல ஒலித்தது கேட்டு கௌரவ படைகள் கதிகலங்கும் காட்சிகளும், துரோணர் அப்போதைய சகுனங்களை வைத்து வந்திருப்பவன் அர்ஜுனனனே என்றும், அவனே வெல்வான் என்றும் சொல்வதும் நிகழும்.. நீங்கள் அதையெல்லாம் எப்படி எழுதப் போகிறீர்கள் என்றும் ஆவலாக இருந்தேன். ஆனால், அர்ஜுனன் ப்ருஹன்னளையாகவே தொடர்ந்ததும், உத்தரன் யுத்தம் செய்ததாக காண்பித்ததும் திரைக்கதையை சப்பென்றாக்கி விட்டது..

என்னுள் உள்ள வ்யாஸனைக் கொண்டு உங்களில் உறையும் வ்யாஸனை காண ஆவல். ஆனால் முக்தனும், கஜனும், சம்பவனுமே காட்சிகளை நிறைப்பதால் ஜெயமோகனே விஞ்சி நிற்கிறார்..

உண்மையுடன்,
பிரசன்னசுந்தர் N ..