Monday, August 21, 2017

முக்தி



முக்தன், பெயருக்கு ஏற்ற படி அவன் அளவில் முக்தி அடைகிறான்.. இங்கிருந்தோ அல்லது அவன் மனதில் இருக்கும் அந்த இடத்திற்க்கோ.

சுபாஷினி, கரவு காட்டில், முக்தன் ஆனே இல்லை என்கிறாள்.. போர்க்களம் காணபோகும் தருணம் முக்தன் அவனை கரவு காட்டில் குடும்பம் குட்டியோடு, குதிரையுடனும் பின் சுபாஷினியுடனும் காண்கிறான்.

 ப்ருஹந்நளை இனி அர்ஜுனன் தான் என்று போர்களத்தில் குதிரையுடன் பார்த்த பின், அவன் மீள மீள வின் மீன்களை பார்ப்பதும்.. பின் இறப்பதும்.

எல்லாம் கோர்வையாக வந்திருக்கின்றது.

கொல்வதின் ஊடாக அவன் அவனை ஆண் என்று உணர்ந்து முக்தி அடைகிறானோ... என்றும் தோன்றுகிறது.

எனக்கு ஒரு அளவில் முக்தன் அர்ஜுனனின் பெண் வடிவின் ஒரு பிம்பம் என்றும் தோன்றுகிறது. அது கர்ணனின் அம்பு பட்டு, நெஞ்சில் உதை வாங்கியது போல், இனி வெளிவரப்போவதில்லை.. ஒரு வேளை வின்னை பார்த்து முக்தி அடைகின்றதோ?!?

நன்றி
வெ. ராகவ்