அன்புள்ள
ஜெயமோகன் அண்ணா,
கீசகன் பீமனால் கொல்லப்படுவதன் சண்டைக் காட்சி விவரிக்கப்படாமல் விடப்பட்டது அதை மிகுந்த வன்முறை என உணரச் செய்கிறது. ஒருவேளை விவரிக்கப்பட்டிருந்தால் அது அவ்வாறு தோன்றாது என்று எண்ணுகிறேன். எவ்வாறாயினும் கீசகன் அதைப் பெற தகுந்தவனே. கீசகன் அஸ்தினாபுரியின் பீமனைப் பற்றி, அவன் உடல்திறம் பற்றி முன்னரே கேள்வியுற்று இருப்பினும் வலவனாக இருக்கும் அவனையும் திரௌபதியையும் எவரென கண்டறியவில்லை என்பதை "பாண்டவர்களின் கதை செல்லாத இடங்களும் உள்ளன அவற்றில் ஒன்று நிஷத நாடு" என்று தமனர் துவக்கத்திலேயே கூறிவிடுவதைக் கொண்டு சமன் செய்துகொள்கிறேன்.
கீசகன் திரௌபதி என நினைத்துக் கொண்டு பீமனிடம் “என் கனவுகளில் நீயே நிறைந்திருக்கிறாய்.” என்கிறான். பீமன் “ம்?” என்கிறான் ("அப்படியா நானே தான் உன் கனவுகளில் இருக்கிறேனா?" என்பதாக). கீசகன் "ஆமாம் நீ என்னுள் இருக்கிறாய்" என்று பீமனை ஆமோதிக்கும் விதமாகவே (திரௌபதியிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு) “ஆம், உன்னளவே அந்த அடுமனையாளனும் என்னுள் இருக்கிறான்” என்கிறான்.
"ஏதாவது ஒரு பூவை மனசில நெனச்சிக்கங்க"

"ம்"
"நீங்க நினைச்சது தாழம்பூ"
எப்படி சரியாக சொன்னான் என்று வியந்துகொண்டேன். நண்பர் சொன்னார் "நீங்க நினைச்சத அவன் சொல்லல. நீங்க என்ன நினைக்கணும்னு அவன் நினைச்சானோ அதைத்தான் நீங்க நினைசீங்க" என்றார்.
பீமனின் உறுதிக்கு கீசகன் தன்னை சமர்ப்பித்துக் கொள்கிறான். ஓரளவிற்கு அது கம்சனின் வழி போன்றது. சம்பவன் போல் அன்பில் கருதி இருப்பதற்கு நேர் எதிர்வழி - ஆனாலும் அதைப் போலவே தொடர் நினைப்பிற்கும், சமர்ப்பனத்திற்கும், விளைவதையே பெறுவதற்கும் இட்டுச் செல்லும் வழி. ப்ரீதை கீசகனின் மரணத்தை தன் உள்ளுணர்வால் அறிகிறாள். கீசகனும் தன் உள்ளுணர்வால் தன் மரணத்தை அறிந்தே இருக்கிறான்.
சுபாஷிணி திரௌபதியின் ஒரு துளி பெறுகிறாள். பதிலாக சேடிப்பெண்களின் கண்ணீரால் அவர்களின் மனத்துயரை தான் பெற்று அறச்சீற்றம் கொள்கிறாள் திரௌபதி. தனக்கு நேர்ந்த அவமதிப்பின் கோபத்தை விட அப்பெண்களுக்குக்காக அவள் அறச்சீற்றம் கொள்கிறாள். சுதேஷ்ணைக்கு அவளுக்கு அவளையே காண்பிக்கிறாள்.
"ஆணவம் அற்றோர் அறத்தில் நிற்பதில்லை. நான் அறத்தோள் என்று உணரும் ஆணவமே தெய்வங்களுக்கு உகந்த உணர்வு.” திரௌபதி யார் என்று தெரியுமாதலால் ஏற்புடையது. அறத்தைக் கொண்டேதான் ஆய்ந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் எல்லா ஆணவக்காரர்களுமே அறத்தின் காரணமாக சீற்றம் என்றே காட்டுகின்றனர்.
அன்புடன்,
விக்ரம்
கோவை