அன்புள்ள ஜெ,
புஷ்கரனுக்கும் உத்திரனுக்கும் கிட்டதட்ட ஒரேமாதிரியான இளமைப்பருவம்தான் வாய்த்தது.
இருவருமே இளமையின் அறியாமையிலும், வேகத்திலும், பாவனையிலும் திளைக்கின்றனர்.
என் கல்லூரி நண்பண் புஷ்கரனைப் போலவே மாறியதைப் பார்த்திருக்கிறேன்.
நம்
குழுமத்தில் புஷ்கரனில் கலியின் நிழல் படிந்ததாலும் உத்திரனுக்கு
இந்திரனின் மைந்தர் துணையிருந்ததுமே அவர்களின் மாற்றத்தின் காரணம் என
வாசித்தேன்.
உண்மையில் புஷ்கரன் தவறவிட்டது என்ன அல்லது உத்திரனைக் காத்தது என்ன?
கிரி
அன்புள்ள கிரி
புனைவுக்கு வெளியே நின்று நான் அதைச் சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன். பொதுவாக வாழ்க்கை என்பது எந்த அளவுக்கு சம்பந்தப்பட்ட மனிதரின் இயல்புகளால் ஆனதோ அதே அளவு வாய்ப்புகளாலும் ஆனது என தோன்றுகிறது
ஜெ