அன்புள்ள ஜெ
வெண்முரசின் அரிய
உச்சங்களில் ஒன்று உத்தரனின் மாற்றம். வீரம் வெற்றி என்றெல்லாம் கனவுகாண்பவன் ஒரு பெரிய
போர்வெற்றிக்குப்பின்னால் அதை தன் வீரர்களின் சாவு என்று மட்டுமே புரிந்துகொண்டான்
என்றால் அவன் முதிர்ச்சியான அரசனாக ஆகிவிட்டான் என்றுதான் அர்த்தம். அவனிடம் வந்த அந்த
எரிச்சல் மக்களைப்பார்த்து அல்ல. சிறுமையைக்கண்டுதான். ஒரு போர்வெற்றியைக்கொண்டாடுவதை
போர்வீரர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. பார்டர் என்றபடத்தைப்பற்றி ஒரு இந்திய
ஜெனரல் எழுதியிருந்தார். அதில் பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுத்தள்ளப்படும்போது நம் மக்கள்
உற்சாகக்கூச்சலிடுகிறார்கள். அது என்னை புண்படுத்தியது என்று. ஏனென்றால் போரில் பங்கெடுத்தவனாகிய
எனக்கு அது ஒருவீரனின் மரணம் என்றுமட்டுமே அர்த்தமாகிறது என்று சொல்லியிருந்தார். அந்த
மனமுதிர்ச்சியை இங்கே காண்கிறேன்
மகாதேவன்